நடிகர் நமிதா தன்னுடைய கணவரை பெரிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. விஜயகாந்த் நடித்த அண்ணா படத்தின் மூலமாக அறிமுகமானவர் நமீதா. அதன் பிறகு பல  நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் .கவர்ச்சியான உடைக்கும் நடனத்திற்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. அதன் பிறகு ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு கடந்த 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.

தற்போது இவர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை நமீதா தன்னுடைய காதல் கணவரை பிரிய இருப்பதாக தகவல் வெளியானது.  இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இது குறித்த  வதந்திக்கு  இதுவரை மௌனம் காத்து வந்த நமீதா தற்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது எங்களைப் பற்றிய விவகாரத்தை வதந்தி வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் என் கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தேன்.

ஆனாலும் நாங்கள் விவாகரத்து பெற்று விட்டதாக வதந்தி பரவி வருகிறது. எதை வைத்து இப்படி வெளியிடுகிறார்கள் என்பது தெரியவில்லை. நானும் என் கணவரும் இந்த விவகாரத்து வதந்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.