தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் கலக்கி வருவதால் தற்போது பாலிவுட் சினிமாவிலும் விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துவிட்டது. இவர் ரஜினி, கமல், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த நிலையில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்க நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜவான் படத்தில் நடித்த அனுபவம் குறித்து விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, எனக்கு முதலில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ஒருவருடன் நடிப்பதில் தயக்கமாக இருந்தது. ஆனால் ஷாருக்கான் தான் ஒரு நடிகர் என்பதை காட்டிக்கொள்ளாமல் மிகவும் சகஜமாக என்னிடம் பேசினார். அது எனக்கு மிகப் பெரிய தைரியத்தை கொடுத்ததால் நான் அவரிடம் நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டேன். சில சமயங்களில் நான் அதிகமாக பேசுவதாக எண்ணி அவரிடம் மன்னிப்பு கேட்பேன். ஆனால் ஷாருக்கான் எதற்காக மன்னிப்பு கேட்கிறீர்கள் உங்களுக்கு தோன்றுவதை தாராளமாக என்னிடம் கேளுங்கள் என்று கூறுவார் என்று கூறினார். மேலும் விஜய் சேதுபதியின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.