நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் 10, +2 பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களை இன்று  நடிகர் விஜய் சந்திக்க உள்ளார்.

சென்னை நீலாங்கரையில் நடைபெற உள்ள இந்த விழாவில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் கல்வி விருது விழா நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்துக்குள் போகும் நபர்கள் செல்போன் மற்றும் பேனா உட்பட எதையும் எடுத்துச் செல்லக்கூடாது என  தடைவிதிக்கப்பட்டு உள்ளது.