பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா மீது ரூ.1.80 கோடி பண மோசடி புகாரில் ஹைதராபாத் போலீசார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். சினிமா படப்பிடிப்புகளுக்குத் தேவையான அதிநவீன உபகரணங்களை (Shooting Equipment) வாடகைக்கு வழங்கும் தனியார் நிறுவனம் ஒன்று, நடிகர் ஆர்யா தங்களது உபகரணங்களைப் பயன்படுத்திக் கொண்டு, அதற்கான வாடகைத் தொகையான ரூ.1.80 கோடியைத் தராமல் ஏமாற்றி வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அந்த நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் அதிரடியாகப் புகார் அளித்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் நடிகர் ஆர்யா மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முன்னணி தமிழ் நடிகர் ஒருவர் மீது ஹைதராபாத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்னிந்தியத் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
