நடிகை ஹன்சிகா தன் பிசினஸ் பார்ட்னர் மற்றும் காதலரான சொஹைல் கதூரியாவை சென்ற டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே ஹன்சிகா தன் நெருங்கிய தோழியின் கணவரை திருடிவிட்டதாக டிரோல் செய்யப்பட்டார்.
ஹன்சிகா நிச்சயதார்த்தம் பற்றி அறிவித்த உடன் முதல் மனைவி- ரிங்கியுடனான சொஹைலின் முதல் திருமணம் குறித்து சமூக ஊடகங்களில் பலர் விமர்சனம் செய்தனர். மேலும் தன்னுடைய தோழியின் கணவரை அவர் திருடி விட்டார் என கேலி செய்தனர். இப்போது வெளியாகியுள்ள இந்த திருமண வீடியோவில் ஹன்சிகா தன்னை பற்றி வரும் வதந்திகளை மறுத்துள்ளார். அதில் ஹன்சிகா கூறியதாவது, சொஹைல் முன்பே திருமணம் ஆன செய்தி மற்றும் பிரிந்ததற்கு நான் தான் காரணம் என கூறப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது என அவர் கூறினார்.