பிரபல நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை  உர்பி ஜாவேத். இவர் தான் அணியும் வித்தியாசமான ஆடைகளுக்காக பிரபலமானவர். இவர் கற்கள், கயிறுகள், கம்பிகள், பூக்களின் இதழ்கள் போன்ற பநடிகை ல்வேறு வித்தியாசமான பொருட்களால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவார். இந்த ஆடைகளை அணிந்து கொண்டு ஒரு உர்பி ஜாவேத் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவார்.

இந்நிலையில் நடிகை உர்பி ஜாவேத் பொது இடங்களுக்கு ஆபாசமான உடை அணிந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் ஆபாசமான முறையில் புகைப்படங்கள் வெளியிடுவதாகவும் கூறிவழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் மும்பையில் உள்ள தெருக்களில் உர்பி ஜாவேத் ஆபாசமான செயல்களில் பகிரங்கமாக ஈடுபட்டதாக கூறி பாஜக தலைவர் சித்ரா வாக் மகாராஷ்டிராவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடிகை உர்பி ஜாவேத்துக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் நடிகையும் பாஜக தலைவர் மீது எதிர் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.