தமிழ்நாடு பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகிய நிலையில் காயத்ரிக்கும், திருச்சி சூர்யா சிவாவுக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது. அண்ணாமலை குறித்து நாகரீகமான முறையில் காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்து வர, திருச்சி சூர்யா சிவா தன்னுடைய வழக்கமான பாணியிலேயே பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் ட்விட்டரில் கருத்து மோதல் அனல் பறந்து வருகிறது.

அண்ணாமலை வந்த பிறகு வார் ரூம் அமைத்து ஹனிட்ராப் மூலம் பணமோசடி செய்யும் கட்சியாக பாஜக மாறிவிட்டது என்று கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த திருச்சி சூர்யா சிவா, உனக்கு வார் ரூம், துபாய் ரூம் எல்லாமே பிரச்சனைதான். வார் ரூம் பற்றி பேசும் நீங்கள் துபாய் ரூம் பற்றியும் பேசினால் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம் மாமி என குறிப்பிட்டுள்ளார்.