நடிகர் அஜித் நடித்திருக்கும் “துணிவு” படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்நேற்று (ஜன,.11) முதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை காண நேற்று முன்தினம் இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளை சூழ்ந்து கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு திரைப்படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் திரையரங்கின் முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடியபோது கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறினார்.  அதாவது, “உயிர் போகும் அளவிற்கு சினிமாவில் ஒன்றுமே இல்லை. பொழுதுபோக்கிற்காக மட்டும் சினிமாவை பாருங்கள்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்..