இந்திய சினிமாவில் நடித்திருக்கும் பல நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளனர். இது வெளிநாடுகளில் சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் இது பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான சில நடிகைகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி இந்திய சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய மறைந்த நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் நடிகை ஸ்ரீதேவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் ஜார்ஜ் என்பவருடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தபோது கடந்த 2019-ஆம் ஆண்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு எமி ஜாக்சனுக்கு பிரேக்கப் ஆன நிலையில் தற்போது அவர் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கல்கி கோச்சலின். இவர் தமிழில் பாவ கதைகள் என்ற படத்தில் நடித்துள்ளார். இவரும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஜோடிகளுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில் நவம்பர் மாதமே அவருக்கு ராஹா என்ற பெண் குழந்தை பிறந்ததால் அவரும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தமிழில் கேடி மற்றும் நண்பன் போன்ற படங்களில் நடித்த இலியானா திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இவர் இதுவரை தன்னுடைய காதலன் யார் என்பதை வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைத்து வைத்துள்ளார். மேலும் தமிழில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணம் முடிந்த கையோடு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். இதனால் அவரும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கூறப்படுகிறது.