மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் வெளியிட்டதாக கூறி நேற்று முதல் ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் மக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.  தமிழகத்தின் வளர்ச்சியை மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியும் யார் கருத்தில் கொண்டு செயல்படுகிறார்களோ அவர்களுக்கு வாக்கிட வேண்டும்.

திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது .இந்த நிலையில் இது குறித்து விசாரித்த போது இந்த அறிக்கை தமிழக வெற்றிக்கழகம் வெளியிடவில்லை என்பது உறுதியானது. வேண்டும் என்றே சில விஷயங்கள் இந்த அறிக்கையை போலியாக தயாரிக்கிறது கண்டுபிடிக்கப்பட்டது.