சென்னை மாநகர கவுன்சிலர்கள் மீது அதிக கமிஷன் கேட்டு பணி நிறுத்தம் மற்றும் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் என்று கவுன்சிலர்கள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாரியம் சார்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நான்கு திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த ஒரு கவுன்சிலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது