தல அஜித் நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் “துணிவு”. இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் ஆவலுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். அண்மையில் வெளியான துணிவு படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் அஜித்தின் இந்த திரைப்படத்திற்கு புக்கிங் ஆகவில்லை. மேலும் மோசமான நிலையில் புக்கிங் இருக்கிறது எனக் கூறி சில நபர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.

இதனை அறிந்த பிரான்ஸ் நாட்டின் விநியோகஸ்தர், தனது உண்மையான டுவிட்டர் கணக்கு இது தான். இனி இதில் வருவது தான் உண்மையான தகவல். தேவையின்றி துணிவு புக்கிங் குறித்து தவறான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். ஆகவே அதை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இதன் வாயிலாக பிரான்ஸ் டிக்கெட் புக்கிங் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.