சமீபகாலமாக தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என்ற பெயரில் விடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற வீடியோக்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என ‘உண்மை சரிபார்ப்புக் குழு’ கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச் செயலாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஒரு சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாட்டில் அதிகமாக குழந்தைகள் கடத்தப்படுவதாக செய்திகள் பரவி வந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்த நிலையில் அது குறித்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.