கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த சேவையை தமிழக அரசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி தனியார் வங்கிகளுக்கு இணையான சேவையை கூட்டுறவு வங்கிகள் வழங்க முடியும். மேலும் இந்த சேவை அனைத்து கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் விரிவுப்படுத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் மக்கள் பணத்தைக் கூட செல்போன் செயலிகள் மூலம் பயன்படுத்திவருகின்றனர் . அந்த வகையில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.