மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜூன் 11 இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார அளவிலான பயிற்சியை ஜூன் 24 முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடத்தி முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் முறை என்பது விளையாட்டு முறையை பின்பற்றி கற்பித்தல் ஆகும். இந்த பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.