தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரும்…. சூழலை உருவாக்கிய சிறுமியின் தற்கொலை….. ராமதாஸ் ட்வீட்…!!!

வேலூர் மாவட்டத்தில் தன்னுடைய தந்தையின் குடிப்பழக்கத்தால் 16 வயது சிறுமியான விஷ்ணு பிரியா என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக முழுவதும் முழுமையான மதுவிலக்கை கொண்டு வரும் சூழலை ஏற்படுத்தி உள்ளதாக பாமக என்ற நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம் சின்னராஜ குப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணு பிரியா தன்னுடைய தந்தையின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தின் மகிழ்ச்சி சீர்குலைந்ததை தாங்கி கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் தன்னுடைய குடும்பம் எப்பொழுது சந்தோஷமாக இருக்கிறதோ அப்பொழுதுதான் தன்னுடைய ஆத்மா சாந்தி அடையும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான குழந்தைகளின் மனநிலை இதுதான். விஷ்ணு பிரியாவின் கடிதத்தையும் முதல்வர் புரிந்து கொண்டு தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.