![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/12/29a4366e-4b78-4509-90ab-f51614896a73.jpg)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த விழாவினை விகடன் நடத்துகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த நிலையில் முதலில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்த ஒரு அம்பேத்கர் சிலையுடன் அவர் செல்பி எடுத்துக் கொண்டார். இந்நிலையில் இந்தியாவில் உள்ள சுமார் 40 முற்போக்கு சிந்தனையாளர்கள் எழுதிய கட்டுரையை தொகுத்து எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தகத்தை நடிகர் விஜய் வெளியிட அதனை ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பேரன் ஆகியோர் பெற்று கொள்கிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ள நிலையில் தற்போது அவருக்கு விழா சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 700 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து முன்னதாக நடிகர் விஜய் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு விழா சார்பில் பொன்னாடை அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மேளதாளங்கள் வாசிக்கப்பட்டது. நடிகர் விஜய் அவர்களுடன் சேர்ந்து மேளத்தை வாசித்தார். மேலும் நடிகர் விஜய் மேளத்தை வாசித்தது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் விஜய் விழாவில் என்ட்ரி கொடுத்தது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.
தலைவா உங்கள இதே மாதிரி எப்போதும் சந்தோஷமா பாக்கணும் தலைவா!!🥺❤#EllorukumanaThalaivarAmbedkar#தமிழகவெற்றிக்கழகம் #TVK pic.twitter.com/9lWvvOWLDc
— Nellai District TVK IT Wing (@NellaiTVKITWing) December 6, 2024
Thalaivar entryyy !! 🔥🔥🔥#EllorukumanaThalaivarAmbedkar#தமிழகவெற்றிக்கழகம் #TVK pic.twitter.com/HEyLfWtrO4
— Nellai District TVK IT Wing (@NellaiTVKITWing) December 6, 2024