சென்னை பல்லாவரத்தில் குடிநீரில் கழிவு நீர் கலக்கப்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால்  20-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மோகன் மற்றும் திரிவேதி (54) உட்பட 3 பேர்  உயிரிழந்தனர். நேற்று இரவு அவர்கள் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட  பிரச்சினைகளால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் குடி தண்ணீரில் கழிவுநீர் கலக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இது குறித்து  அமைச்சர் த.மோ அன்பரசன் கூறும் போது குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை எனவும், அப்படி கலந்து இருந்தால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் எனவும் தற்போது 20 பேர் தான் பாதிக்கப்பட்டனர் எனவும் அதனால் குடிநீரின் கழிவுநீர் கலக்க வாய்ப்பே கிடையாது என்றும் கூறியுள்ளார். அதோடு உணவு பொருளில் தான் கலப்படம் உள்ளது என்றும் உயிரிழந்தவர்கள் முன்னதாக மீன் சாப்பிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.