இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த சில மாதங்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் தல தோனியை முன்னாள் கிரிக்கெட் வீரர் கைஃப் குடும்பத்துடன் சந்தித்துள்ளார். அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அதில், இன்று விமான நிலையத்தில் ஒரு சிறந்த மனிதரை சந்தித்தோம். அவர் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்கிறார். சிறுவயதில் கால்பந்து விளையாடியதாக தோனி கூறிய போது எனது மகன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். விரைவில் குணமடையுங்கள் அடுத்த சீசனில் சந்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.