சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய நிபந்தனை, விபத்தில் சிக்கியவர்களை ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் கால அளவிற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றியிருக்க வேண்டும். இத்திட்டம் 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.