கோவிலுக்குள் இப்படியா வரணும்?…. நடிகை கங்கனா ரணாவத் காட்டம்….!!!!!

பாலிவுட்டில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் இப்போது சந்திரமுகி 2, எமர்ஜென்சி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் அதிகமான சம்பளம் பெறும் நடிகையாகவுள்ள இவர் சமூகவலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். இமாசலம் பிரதேசத்தில் பஷிநாத் கோயிலில் ஒரு பெண் இரவு ஆடைகளை அணிந்து சுவாமி தரிசனம் செய்ததாக நபர் ஒருவர் இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்து விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் கங்கனா அப்பெண் குறித்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் “இவை மேற்கத்திய ஆடைகள், வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவை. நான் ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்திருந்ததற்காக வாடிகனில் என்னை வளாகத்திற்குள் கூட அனுமதிக்கவில்லை. நான் மீண்டும் என் ஓட்டலுக்குச் சென்று உடை மாற்ற வேண்டி இருந்தது. சாதாரணமாக இரவு ஆடைகளை அணியும் இவர்கள் கோமாளிகள் மற்றும் சோம்பேறிகள் ஆவர்.  அதுபோன்ற முட்டாள்களுக்கு கடும் விதிமுறைகள் இருக்கவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/KanganaTeam/status/1661942098478927872?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1661942098478927872%7Ctwgr%5E40d649e708d4a9da87748227f4dcf86ff83b975c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fcinema%2Fcinemanews%2Ftamil-cinema-actress-kangana-post-goes-viral-614306

Leave a Reply