
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடித்து கடந்த 2018ல் வெளியாகிய “கே.ஜி.எப்” கன்னட படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. கேஜிஎப்-2 சென்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாகி வசூல்சாதனை படைத்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகியது.
உலகம் முழுவதும் கேஜிஎப் 2ம் பாகம் ரூபாய்.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. அதன்பின் கேஜிஎப் திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தயாராகவுள்ளது. இப்படத்தின் 5 பாகங்களில் யாஷ் நடிப்பார் என தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார். எனினும் கேஜிஎப்-6ல் யாஷ்க்கு பதில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் வேறு கதாநாயகன் நடிப்பார் எனவும் அவர் கூறினார். இத்திரைப்படத்தின் 3ஆம் பாகம் படப்பிடிப்பு 2025-ம் வருடம் துவங்கும் என அறிவித்துள்ளனர்.