பிரபல சின்னத்திரை நடிகை ஆயிஷா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா என்ற தொடரின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு ஆயிஷா பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். ஆயிஷா ஏற்கனவே திருமணமாகி 2 முறை விவாகரத்து ஆனவர் என முன்னாள் காதலர் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ஆனால் இதற்கு ஆயிஷா தரப்பில் இருந்து எந்த வித விளக்கமும் வரவில்லை. இந்நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால் தன்னுடைய காதலர் போட்டோவை ஆயிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார். மேலும் நடிகை ஆயிஷாவுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.