தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2015-ல் காஞ்சனா 2 மற்றும் 2019 -ல் காஞ்சனா 3 ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்கள் அனைத்தும் ஹாரர் மற்றும் காமெடி ஜானரில் உருவான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா-4 திரைப்படம் வெளியாகும் எனவும் செப்டம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்கும் எனவும் அறிவித்தார். அதன் பிறகு படத்தில் நடிகை மிருணாள் தாக்கூரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்தான் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று இணையதளங்களில் தகவல்கள் பரவியது. இதற்கு தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் காஞ்சனா 4 படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்திதான். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். மேலும் ராகவா லாரன்ஸிடம் ரசிகர்கள் சீதாராமம் பட நாயகி மாருணாளை ஹீரோயின் ஆக நடிக்க வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அந்த கோரிக்கை நிறைவேறுமா இல்லையா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.