லட்சுமி மேனனுடன் திருமணம் என்ற செய்தியை மறுத்துள்ள நடிகர் விஷால், ஒரு பெண்ணின் வாழ்க்கையை சிதைக்காதீர்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் நடிகை லஷ்மி மேனனை திருமணம் செய்யவுள்ளதாக சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக தகவல் பரவிய நிலையில், நடிகர் விஷால் அதனை மறுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என்னைப் பற்றிய போலி செய்திகளுக்கும், வதந்திகளுக்கும் நான் பதிலளிப்பதில்லை. லட்சுமி மேனன் ஒரு பெண். அவரது அடையாளத்தை சிதைக்காதீர்கள். நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அறிவிப்பேன்’ என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.