Youtube சினமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பொய்யான சினிமா விமர்சகர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பெரிய பிரபலங்கள் படங்கள் என்றாலே முதல் நாள் 4 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 4 மணி சிறப்பு காட்சிகள் அல்லாமல் முதல் காட்சியே தமிழகம் முழுவதும் 9 மணிக்கு திரையிடப்பட்டது. இதை தொடர்ந்து, யூ டியூபில் பலரும் பொய்யான ரிவியூ வீடியோக்களை பதிவிட்டு பார்வையாளர்களை பெற்று வந்தனர். இதைக்கண்டு பொங்கி எழுந்த பிரபல youtube சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில்,

உருட்டு 1:

தமிழ்நாட்ல முதல் ஷோ 9 மணிக்குதான். படம் ரெண்டே முக்கா மணிநேரத்துக்கு மேல ஓடும். கால் மணிநேரம் இடைவேளை. ஆக… 12 மணிக்கு முன்னாடி பப்ளிக் ரிவியூ எடுக்கவே முடியாது.

ஆனா இந்த யூட்யூப் சேனலுங்களை பாத்தீங்களா? பழைய ரஜினி படத்துக்கு எடுத்த பப்ளிக் ரிவியூவை எல்லாம் எடிட் பண்ணி ஜெயிலர் விமர்சனம்னு பச்சையா பொய் சொல்லுறாங்க.

அடுத்த உருட்டு:

FDFS Collection 50 கோடி. நாளைக்கி காலைல வந்துடும். என பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.