ஐசிசி முன்னாள் தலைவர் கிரேக் பார்க்கலே. இவரது பதவிக்காலம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய தலைவராக கடந்த ஒன்றாம் தேதி ஜெய்ஷா பொறுப்பேற்றார். ஐசிசி தலைவரான ஜெய்ஷா தனது முதல் அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஐசிசி இயக்குனர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என கூறினார். மேலும் உலக அளவில் கிரிக்கெட்டை மிகவும் பிரபலமாக்குவதையும் 2028 லாஸ் ஏஞ்சல்சில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதை தயார் செய்வதையும் வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பெண்கள் விளையாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை கூறினார். அப்போது அடுத்த பிசிசி செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. பிசிசிஐ அடுத்த 45 நாட்களுக்குள் புதிய செயலாளரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ-யின் இணை செயலாளராக இருப்பவர் தேவஜித் சைகியா. அவரை தற்காலிக செயலாளராக நியமனம் செய்துள்ளனர். இந்த தகவலை பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.