இது என்ன மாயம் என்ற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சீம ராஜா, மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நடிகர் திலகம் படத்தில் இவர் சாவித்ரியாக வாழ்ந்து அனைவரையும் ரசிக்க வைத்தார். கடைசியாக இவர் நடிப்பில் சைரன் படம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

அதாவது என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி அடிக்கடி ஒருத்தர் கிட்ட இருந்து லெட்டர் வந்துகிட்டே இருந்துச்சு .அந்த லெட்டர் அட்ரஸ் எல்லாம் போட்டு வரும்.  அதேபோல இன்னொருத்தர் வீடு தேடியே வந்தார். ஆனால் அவர் கொஞ்சம் வேற மாதிரி இருந்தாரு. நான் அப்போ வீட்டில் இல்லை. வீட்டில் வேலை செய்பவர்கள் தான் இருந்தாங்க. இவர் நேரா அவங்க கிட்ட போய் ஏன் கீர்த்தி இந்த படம் எல்லாம் பண்றா? ஏன் அந்த படம் எல்லாம் பண்றா? அப்படின்னு கேட்டு இருக்காரு. ஏதோ நான் அவரை வைஃப் மாதிரி பேசிட்டு இருந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.