பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து பலரையும் கவர்ந்தார். இதற்கிடையில் துரதிஷ்டவசமாக இவருடைய மறைவால் வேலராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

இப்போது இந்த நாடகம் முடிவடைந்த நிலையி இதுகுறித்து பேசிய இவர், எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்று என்பதை என்னால் மறுக்க முடியாது. தொடக்கத்திலிருந்து கடைசிவரை பரபரப்பாக சென்றது.  ஆனால் இந்த சீரியலில் ஏன் நடித்தேன் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ரசிகர்கள் கடைசிவரை என்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை இது எனக்கு அவமானம் என்று கூறி இருக்கிறார்.