பிரபல தொழில்முனைவோரும் ‘எம்பிஏ சாய்வாலா’ நிறுவனருமான ப்ரஃபுல் பில்லோர் தான் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய போலிச் செய்திகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் போன்ற தளங்களில் அவர் இறந்துவிட்டதாக பரவிய தவறான தகவல்களை நம்பி, பலரும் அவருக்கு இரங்கல் செய்திகளைப் பகிரத் தொடங்கினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ப்ரஃபுல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் உயிரோடுதான் இருக்கிறேன், இது மிகவும் அவமதிப்பான மற்றும் மனவேதனை அளிக்கக்கூடிய விஷயம் தயவுசெய்து இதுபோன்ற போலிச் செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
‘I Am Alive’: MBA Chaiwala Founder Prafull Billore Reacts To Viral Death Hoax, Urges People to Stop Spreading Fake News https://t.co/4uB5rWIThz
— Rajeshwarirajii Rajii (@Rajeshwari66464) July 3, 2026
“>
இந்நிலையில் இணையத்தில் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் செய்திகளைப் பரப்புவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ப்ரஃபுல் பில்லோர், தனது எம்பிஏ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வெறும் 8,000 ரூபாய் முதலீட்டில் ஒரு சிறிய தேநீர் கடையைத் தொடங்கினார்.
இதனால் தனது தனித்துவமான மார்க்கெட்டிங் உத்திகள் மற்றும் கடின உழைப்பால் ‘எம்பிஏ சாய்வாலா’ என்ற பிராண்டை நாடு முழுவதும் பிரபலமாக்கினார். அவர் உயிருடன் இருப்பதை உறுதிசெய்து வெளியிட்ட இந்த விளக்கப் பதிவிற்குப் பிறகு, அவருடைய ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருவதோடு, வதந்திகளைப் பரப்பியவர்களுக்கு தங்களின் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
