தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இவர்கள் இருவரும் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ள நிலையில் ரசிகர்களின் ஃபேவரைட் ரீல் ஜோடியாக இருக்கிறார்கள். அதேசமயம் நடிகை திரிஷா மற்றும் விஜய் பற்றிய வதந்திகளும் பரவிக்கொண்ட தான் இருக்கிறது. அதாவது நடிகர் விஜயின் பிறந்தநாளின் போது திரிஷா மற்றும் விஜய் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை திரிஷா பகிர்ந்திருந்தார். இதனால் மீண்டும் அவர்கள் பற்றிய தகவல் தலை தூக்க ஆரம்பித்த நிலையில் சங்கீதா மற்றும் விஜயின் பிரிவுக்கு கூட திரிஷா தான் காரணம் என்று தகவல் பரவுகிறது.

இந்நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது நடிகர் விஜய் தன்னுடைய அம்மா சோபாவுக்காக ஒரு சாய்பாபா கோவில் கட்டியிருந்தார். இந்த கோவிலுக்கு சமீபத்தில் நடிகை திரிஷா சென்றாராம். ஆனால் இது சோபாவுக்கு பிடிக்கவில்லை என்பதால் இனிமேல் நீ இங்க வரக்கூடாது என்று அவரை கடுமையாக திட்டி விட்டதாக கூறியுள்ளார். அதோடு உனக்கு இங்கு என்ன வேலை என்றும் அவர் கேட்டுள்ளார். ஆனால் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் நடிகை திரிஷா சாய்பாபா கோவிலில் வழிபட்டது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.