அரச சட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்பி சிறையில் அடைக்கப்பட்ட இளம் பெண் ஆர்வலர் ஒருவர் பல மாதங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து  நேற்று உயிரிழந்தார். தாய்லாந்தைச் சேர்ந்த நெட்டிபோர்ன் சனேசங்கோம் (28) மன்னராட்சியை வெளிப்படையாக விமர்சிக்கும் ‘தலுவாங்’ குழுவின் முக்கிய உரிமை ஆர்வலர் ஆவார். நாட்டில் உண்ணாவிரதத்தில் இறந்த முதல் அரசியல் ஆர்வலர் இவர் என்று கூறப்படுகிறது.