நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் மாத பட்ஜட்டில் எப்பொழுதுமே மளிகை பொருட்களுக்கு தான் முதலிடம் கொடுப்பார்கள். வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி சமையல் அறையில் இருப்பு வைத்தாலே இல்லத்தரசிகளுக்கு பாதி நிம்மதி கிடைத்துவிடும்.அதற்கு காரணம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மளிகை பொருட்கள் இருப்பதுதான். ஆனால் இப்போது நடுத்தர ஏழை, எளிய மக்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக கடந்த ஒரு மாதமாக மளிகை பொருட்கள் விலை கிடுகிடுவென்று கடுமையாக உயர்ந்து வருகிறது.

அதன்படி அரிசி ரகத்திற்கு ஏற்ப ரூ.10 வரையும், மளிகைப் பொருட்களின் விலை ரூ.8% முதல் 20% வரையும் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகளின் விலை ரூ.10 முதல் ரூ.20 வரையும், ஒரு கிலோ துவரம்பருப்பு ரூ.118-ல் இருந்து ரூ.160ஆகவும் விலை அதிகரித்துள்ளது. இதனால், சாமானிய மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.