அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக மற்றும் அதிமுக என 2 கட்சிகளிலும் 5 ஆண்டுகளில் போட்டியிட்டு நின்றவர் தான் செந்தில் பாலாஜி. அவரைப் போன்று அமைச்சர் சேகர்பாபுவும் இருக்கிறார். இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள். அமைதிப்படை அமாவாசை என்ற பெயருக்கு பொருத்தமானவர் செந்தில் பாலாஜி தான். சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளும் வேடந்தாங்கல் பறவையை போன்றவர்கள் செந்தில் பாலாஜி மற்றும் சேகர்பாபு. இவர்கள் இருவரும் அரசியல்வாதிகள் கிடையாது அரசியல் வியாபாரிகள். இவர்களுக்கு என்னைப்பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது என்று விமர்சித்தார்.

இதற்கு தற்போது செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, புளி மூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்த ஒரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி எடப்பாடி பழனிச்சாமி. அவர் எப்படிப்பட்ட வியாபாரி என்பது அவரை சுற்றியுள்ளவர்களுக்கு நன்றாக தெரியும். தன்னுடைய பதவி நிலைக்க வேண்டும் என்ற சுயலாபத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைத்தவர். மேலும் இதனை பொதுமக்கள் நன்றாக அறிவார்கள் என்று கூறினார்.