தொகை வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. விழா நடக்கும் தொகுதி வாரியாக மாணவர்களுக்கு ஊக்கத் இடத்துக்கு வருகை தந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து வரவேற்பு அளித்தனர். அவர் வீட்டில் இருந்து புறப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் வெள்ளம் அவரை திக்குமுக்காட வைத்துவிட்டது. காரில் இருந்து இறங்கி விழா மேடைக்கு வருவதற்குள் ரசிகர்கள் படை அவரை திணறடித்துவிட்டனர்.

விழாவில் பேசிய விஜய், “எத்தனையோ மேடை பார்த்துள்ளேன். ஆனால் இந்த மேடை எனக்கு புதிது. ஒரு பொறுப்புணர்ச்சி வந்துள்ளது போல் உணருகிறேன். சினிமாவை நோக்கி இவ்வளவு நாள் ஓடி னேன். இனி வரும் காலங்களில்.. சரி அதை இப்போது பேச வேண்டாம்” என அரசியல் குறித்து சூசகமாக அறிவித்தார். அரசியல் வருகையின் தொடக்கம் இது என்பதை விஜய் சொல்லாமல் சொல்லியுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.