
மத்திய பிரதேசம் மாநில அரசின் பிராமண நல வாரிய தலைவர் விஷ்ணு ராஜவுரியா. இவர் இந்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் சனாதன தர்மத்தை பாதுகாக்க பிராமண தம்பதிகள் 4 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறினார். நாம் வறுமை மற்றும் பணவீக்கம் பற்றி பேசக்கூடாது.
சமீப காலமாக 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இதன் காரணமாக சனாதன தர்மத்தை மீட்டெடுப்பது முக்கியம். கல்விதான் முக்கியம் என்று கூறுவதால் தற்போது ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். எனவே வருங்கால தலைமுறையினரை காக்க வேண்டியது அவசியம். மேலும் இதற்காக பிராமண தம்பதிகள் 4 குழந்தைகளை பெற்றெடுத்தால் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்.