முதுநிலை நீட் தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை திமுக எம்பி வின்சென்ட் டெல்லியில் நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்து நீட் முதுகலை தேர்வு மையங்கள் தொடர்பான கோரிக்கையை முன் வைத்தார்.

அவர் அளித்த கோரிக்கை மனுவில், வருகின்ற 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நீட் முதுகலை தேர்வுக்கு தொலைதூர மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தங்களது இருப்பிடத்திலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே தேர்வு மையங்களை மாவட்டத்திற்குள் அல்லது குறைந்தபட்சம் அந்தந்த மாணவர்களின் மாநிலத்திற்குள் மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் தேர்வு மையங்கள் தமிழ்நாட்டிற்குள்ளேயே மாற்றி தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.