பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாவை நான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார். 1988 ஆம் ஆண்டு ஜூஹி சாவ்லா ஹிந்தியில் நடித்த கயா மத் சே காயாமத்தக் படத்தைப் பார்த்தபோது அவரது அழகில் மயங்கினேன். எனது அம்மாவிடம் அவரை திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறினேன். இப்போது எனக்கு அவருடன் ஒரு வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சியில் உள்ளேன் என்று மாதவன் கூறியுள்ளார்.