பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் மண்டி தொகுதியின் பாஜக கட்சி எம்பி ஆவார். இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையப்படுத்தி தற்போது எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் அடுத்த மாதம் 6-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் தற்போது எமர்ஜென்சி படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை நடிகை கங்கனா ரணாவத் அவரது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு இந்தியா தான் இந்திரா. இந்திரா தான் இந்தியா. நம் நாட்டு வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த பெண் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram