பிரபாஸ் நடிப்பில் அதிக பொருள் செலவில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஆதிபுருஷ். இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் ஓம்ராவத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ், ஆதிபுருஷ் திரைப்படத்தை சினிமா என சொல்லக்கூடாது. இது ராமாயணம், இதில் நடித்தது எனது அதிர்ஷ்டம். ராமர் அனைத்து மக்களின் இதயத்திலும் உள்ளார். அப்படிப்பட்ட வேடத்தில் நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததை கடவுளின் அருளாக பார்க்கிறேன் என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.