சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அறுவை சிகிச்சை பிரசவங்களின் எண்ணிக்கை 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்து உள்ளது . நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய பெண்களுக்கும் அதிக அளவில் எடை கொண்ட பெண்களுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது