தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியாமணி கடந்த 2004-ம் ஆண்டு பாரதிராஜாவின் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்தப் படத்திற்காக நடிகை பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு பிரியாமணி முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த பிரியாமணி அசுரன் பட ரீமேக்கின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில்  38 வயதிலும் கட்டுக்கோப்பான தோற்றத்தில்தான் இருக்கிறேன் என்று நடிகை பிரியாமணி தெரிவித்தார். சமூக வலைதளத்தில் நிறம் குறித்த கேலிக்கு பதில் கூறிய அவர், “நான் கருப்பாக இருக்கிறேன். மாநிறத்தில் இருக்கிறேன் என்று கேலி செய்கிறார்கள். இப்படி இருப்பதால் என்ன தவறு..? நான் இப்படி இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால், உங்கள் வாயை மூடுங்கள்” என, காட்டமாக பதிலளித்துள்ளார்.