ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிய “துணிவு” படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனி கபூர் தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழக்தில் வெளியிட்டது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இத்திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் டான்ஸ் மூவ்ஸ் குறித்து இயக்குனர் வினோத் கூறியிருப்பதாவது, “துணிவு திரைப்படத்தின் முதல் பாதியில் வரும் சில நடனங்கள் அஜித் சாரே ஆடியது. கேமராவை வைத்துவிட்டு நீங்க ஆடுங்க சார் என விட்டுவிட்டோம். மைக்கேல் ஜாக்சன் மூன் வாக் நடனத்தை அஜித் சார் அவராகவே ஆசைப்பட்டு ஆடினார். அதனை அஜித் சார் ஈசியாக செய்துவிட்டார்” என நெகிழ்ச்சியாக கூறினார்.