இந்திய சினிமாவில் பொதுவாக ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவுதான். இது தொடர்பாக நடிகைகள் கூட பலமுறை கூறியிருக்கிறார்கள். பொதுவாக ஒரு படத்தில் நடிக்க நடிகைகளுக்கு ஒரு கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல கவர்ச்சி நடிகையின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடனங்கள் ஆடியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை நேரா பதேஹி.

இவர் பாகுபலி படத்தில் வரும் மனோகரி பாடலுக்கு ஆடியுள்ள நிலையில், தமிழில் தோழா படத்தில் இடம்பெறும் டோர் நம்பர் ஒன்னு பாடலில் ஆடியுள்ளார். கவர்ச்சி நடனம் என்றால் தற்போது நேராவை கூப்பிடங்கள் என்று சொல்லும் அளவிற்கு அசத்தலாக நடனமாடி வருகிறார். இந்நிலையில் நடிகை நேரா பதேஹி ஒரு பாடலுக்கு நடனமாட 5 நிமிடத்திற்கு மட்டும் ரூ.5 கோடி சம்பளம் வாங்குவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.