தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே மற்றும் அயலான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி பதானியுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நடிகர், நடிகைகள் பலரும் சினிமாவை தாண்டி பல தொழில்களை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத்சிங் ஹைதராபாத்தில் உள்ள மாதப்பூர் பகுதியில் புதிய உணவகம் ஒன்றினை கட்டியுள்ளார். இந்த உணவகத்தின் திறப்பு விழா நாளை நடைபெறும் நிலையில் அனைவருக்கும் சத்தான மற்றும் சுவையான உணவை வழங்கும் நோக்கத்துடன் இந்த உணவகத்தை தொடங்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் புதிதாக தொழில் தொடங்க இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.