திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ் கேள்வி செந்தில், தனியார் கல்லூரிகளில் 4400 இடங்கள் காலியாக இருக்கிறதா ?  நிரப்பபடாமல்  இருக்கிறதா?  என்ன செய்யலாம் ? சொல்லு…  ஐயா மார்க் பத்தலன்னு சொலுறாங்க  ஐயா…  மார்கே எடுக்க வேண்டாம்,  எல்லாரையும் செத்துகிட சொல்லு.

ஐயா முட்ட மார்க் எடுத்தா கூட பிரவாயில்லையா ? மைனஸ் எடுத்து இருக்கான்… பரவாயில்லை  சேர்த்துக்கிட சொல்லு என்று மைனஸ் மார்க் எடுத்தா கூட டாக்டர் ஆகலாம் என்று தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்டத்திருத்தை கொண்டு வந்த நீங்களெல்லாம் யோக்கியனுங்க….  செத்து போன அனிதாவிற்காகவும், ஜெகதீஸ்வரனுக்கவும்  போராடி கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் பார்த்து கேள்வி கேட்பதற்கு உங்களுக்கு யாருக்கு துப்பு இருக்கு?

நீட் விலக்கு,  நம் இலக்கு. எதற்காக ? நீட்டை எதிர்த்து நம் திராவிட முனேற்ற கழகம் போராடுகிறது… உங்களுக்கு தெரியுமா ? தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக தான் திமுக நீட்டை எதிர்கிறது அப்படின்னு சொன்னாங்காக…. அப்படியா ? அப்படினா…  அப்படிலாம் இல்ல,  நாங்கள் யாருக்காக போராடுகிறோம் என்றால் ?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யாருக்காக போராடிக்கொண்டு இருக்கின்றார் என்றால் ? அவர் ஒரு அமைச்சராக அல்ல…  தமிழ்நாட்டின் முதலமைச்சர் மகனாக அல்ல…  கலைஞரின் பேரனாக அல்ல…  அனிதாவின் அண்ணாக நீட்டை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறார்.  ஜெகதிஸ்வரனின் அண்ணாக நீட்டை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.