ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினியால் அவதிப்படும் மக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக உணவு தினத்தின் முக்கிய நோக்கமாகும். உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணவு தான் உயிர் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரம். உலக உணவு பாதுகாப்பு தினம் 2023-ன் கருப்பொருள் வெளியிடப்பட்டது.

அதாவது “உணவுத் தரநிலைகள் உயிர்களைக் காப்பாற்றுகின்றன” என்பதே ஆகும். இந்நிலையில் நுகர்வோரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலும், உலகம் முழுவதும் உள்ள உணவுத் தரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனையடுத்து உலக உணவுப் பாதுகாப்பு தினத்தில் பங்கேற்க பிரத்யேக வீடியோ மூலமாக FAO உணவு அமைப்புகள் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் கொரின்னா ஹாக்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் “FAO நாடுகளுக்கு விவசாய உணவு முறைகளை மாற்றுவதற்கு ஆதரவளிக்கிறது. அது மக்களுக்கும், இந்த உலகத்திற்கும் பயனளிக்கும்,” என்று கூறுகிறார். முக்கியமாக கொள்கை வகுப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான உணவுகளின் நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரிக்க தங்கள் செயல்பாடுகளை மறுசீரமைக்க வேண்டும்.

இந்நிலையில் உலக உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்கவும் பயன்படும் கருப்பொருள், உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்கள், நிகழ்வு யோசனைகள் மற்றும் முக்கிய செய்திகள் ஆகியவற்றின் மேலோட்டத்தை வழங்குவதற்காக அனைத்து 6 அதிகாரப்பூர்வ UN மொழிகளிலும் நிகழ்வு வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை, உணவு விநியோகச் சங்கிலியில் உணவுப் பாதுகாப்புத் தரங்களைக் கடைப்பிடித்து எதிர்பார்ப்பதை ஊக்குவிப்பதாதே உலக உணவுப் பாதுகாப்பு தினத்தின் நோக்கம்.