உலக கோப்பையில் இந்தியா – ஆஸ்திரேலியா சென்னையில் மோதவுள்ள நிலையில், அங்கு ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக உள்ளது.

ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை 2023 இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் கடந்த உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து மற்றும் ரன்னர்-அப் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையின் கடைசி இறுதிப் போட்டி நவம்பர் 19-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா தனது உலகக் கோப்பை போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பைக்கு முன் திட்டமிடப்பட்ட 2 பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவில்லை.

இந்தியாவின் முதல் ஆட்டம் இங்கிலாந்துக்கு எதிராக செப்டம்பர் 30-ம் தேதி கவுகாத்தியில் நடைபெற இருந்தது, பின் 2வது பயிற்சி ஆட்டம் நெதர்லாந்துக்கு எதிராக திருவனந்தபுரத்தில் அக்டோபர் 3-ம் தேதி நடைபெற இருந்தது, ஆனால் கனமழை காரணமாக இந்த 2 போட்டியும் ஒரு ஓவர் கூடவீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.. இதன் காரணமாக , ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நேரடியாக களமிறங்க வேண்டும். இருப்பினும், சமீபத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது, இதில் டீம் இந்தியா 2-1 என வென்றது. அதற்கு முன்புதான் இந்திய அணி ஆசிய கோப்பையை விளையாடி வென்றது. இதனால், கடந்த ஒரு மாதமாக இந்திய அணி அதிக அளவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதிக வெற்றிகளை பெற்று நல்ல பார்மில் உள்ளது. 

சென்னையில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது :

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் உலகக் கோப்பை தொடங்கும் முன் செய்தியாளர் சந்திப்பில், தனது அணி நிச்சயமாக அந்த 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட விரும்புவதாகவும், ஆனால் விளையாட முடியாதது  தனது அணிக்கும் நல்லது, ஏனெனில் வீரர்களுக்கு சிறிது ஓய்வெடுக்க ஒரு வாய்ப்பு. நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், ஆசிய கோப்பையிலும் நிறைய போட்டிகளில் விளையாடி, உலகக் கோப்பைக்கு தயாராகிவிட்டோம். இப்போது அனைத்து வீரர்களும் முற்றிலும் புதிய மனநிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்குவார்கள்” என்றார்.

இருப்பினும், சென்னையில் ஆஸ்திரேலிய அணியின் சாதனை மிகவும் சிறப்பாக உள்ளது. ஆம் இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா மொத்தம் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 5ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலியா இந்தியாவுடன் மட்டும் சென்னையில் மொத்தம் 3 ஆட்டங்களில் விளையாடி, அதில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வெல்லுமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.