ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 4ம் தேதி உலக விலங்குகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. விலங்குகளின் அரணை உறுதி செய்வதற்கும் இயற்கையில் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அதேசமயம் உலக விலங்கு காதலர்கள் தினம் என்றும் இந்த நாள் அழைக்கப்படுகின்றது. கடந்த 1931 ஆம் ஆண்டு மே மாதம் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு காங்கிரஸ் மாநாட்டில் அக்டோபர் நான்காம் தேதி உலக விலங்குகள் தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தை மையமாகக் கொண்டு விலங்குகள் நல தொண்டு நேச்சர் வாட்ச் அறக்கட்டளை சர்வதேச இடங்கள் தின கொண்டாட்டத்தை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. மனிதர்கள் மற்றும் தாவரங்களை போல விலங்குகளும் நம்முடைய சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக உள்ளது. குறிப்பாக மனிதர்களின் வாழ்க்கையில் விலங்குகளின் பங்கு என்பது மிக முக்கியமானது. விலங்குகளுக்கான தங்குமிடங்களை உறுதி செய்தல், விலங்குகளின் நலனை பாதுகாப்பது மற்றும் நிதி திரட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு விலங்குகள் தினம் கொண்டாடப்படுகின்றது.