ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 4ம் தேதி உலக விலங்குகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. விலங்குகளின் அரணை உறுதி செய்வதற்கும் இயற்கையில் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அதேசமயம் உலக விலங்கு காதலர்கள் தினம் என்றும் இந்த நாள் அழைக்கப்படுகின்றது.

உலக விலங்குகள் தினத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் விலங்கு நலன் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதாகும். ஏற்பாடு செய்யப்பட்ட முதல் நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நோக்கத்திற்காக தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். விலங்குகள் நம்முடைய வாழ்க்கையை எப்படி மேம்படுத்துகின்றன என்பதை நினைவு கூறும் நாள் தான் இது. விலங்குகளிடம் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் மனிதர்களுக்கு எதிராகவும் பல்வேறு சமூகங்கள் மற்றும் குழுக்களை ஊக்குவிப்பதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.